دانلود کتاب புதிய இராகங்கள்
by து.ஆ.தனபாண்டியன்|
|
عنوان فارسی: پادشاه جدید |
دانلود کتاب
جزییات کتاب
பழந்தமிழிசையாகிய கருநாடக இசையுள் புதிய இராகங்கள் பலவற்றை ஆராய்ந்து கண்டுபிடித்து அவைகளின் இலக்கணம் (லட்சணம்), போக்கு (சஞ்சாரம்) முதலியவற்றைக் கண்டு, அவைகளின் வடிவத்தைத் தெரிந்து, அவற்றைப் பாடல்களில் அமைத்து இயற்றும் பணியை மேற்கொண்டு அவற்றை இந்நூல் வடிவில் தருகிறேன்.
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு தனி வடிவம் இருப்பதை நாம் அறிவோம். இந்தத் தனி வடிவத்தை மூர்ச்சனை, சாயல் அல்லது சாயை என்று அழைக்கிறோம். பல புதிய இராகங்களைக் கண்டு பிடித்த பின்பு அந்த இராகங்களின் வடிவம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். புதிய இராகத்தின் சீவசுரம், அதற்கு அடுத்தபடியான முக்கிய சுரம் அல்லது சுரங்கள், அந்த இராகத்தின் இணை, கிளை, நட்புச் சுரத்தொடர்கள், தவிர்க்க வேண்டிய பகைதொடர்கள், அந்த இராகத்தின் போக்கு முதலியவைகளை அறிந்து, அந்த இராகத்தைப் பாடிப் பாடி அதன் முழு வடிவத்தையும் கண்டுகொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த இராகத்தில் பாடல்களுக்குரிய இசையை அமைக்க வேண்டும்.
தஞ்சை ஆபிரஹாம் பண்டிதர் கண்டுபிடித்து இசை உலகிற்கு அளித்துள்ள இராகபுடமுறையைப் பின்பற்றி இந்த இராகங்களுக்குரிய இணை, கிளை, நட்புச் சுரத் தொடர்களை விவரமாக எழுதியிருக்கிறேன். இந்த இராகங்களின் சீவசுரம், அமுதவைப்பு முதலியவைகளையும் கண்டுபிடித்துக் குறிப்பிட்டுள்ளேன். இந்த இராகங்களின் இலக்கணத்தையும் (லட்சணம்), போக்கையும் (சஞ்சாரம்) கொடுத்திருக்கிறேன். இணை, கிளை, நட்புச் சுரத் தொடர்கள் பற்றிப் பதினோராவது அத்தியாயத்திலும், இராகபுடமுறை பற்றிப் பன்னிரண்டாவது அத்தியாயத்திலும் விளக்கியுள்ளேன்.
இந்த இராகங்களில் கீதம், சுரஜதி, ஜதிசுரம், வர்ணம், கீர்த்தனை முதலியவைகளுக்கு இசை அமைத்துள்ளேன். ஆதி, ரூபகம், திரிபுடை, திஸ்ரஜாதிரூபகம் (ஜம்பை), திஸ்ர ஏகம் முதலிய பல்வேறு தாளங்கள் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இராகபுடமுறையை விளக்குவதற்காக நம் பழக்கத்தில் உள்ள மலகரி, அம்சத்தொனி, சக்ரவாகம் ஆகிய இராகங்களுக்கு இணை, கிளை, நட்புச் சுரத் தொடர்களை எழுதி, இந்த இரகங்களின் சீவசுரம், அமுதவைப்பு முதலியவைகளைக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த இராகங்களின் இலக்கணம், போக்கு முதலியவைகளையும் விளக்கியுள்ளேன். மலகரி இராகத்தில் ஒரு கீதத்திற்கும், அம்சத்தொனி, சக்ரவாகம் இராகங்களில் கீர்த்தனைகளுக்கும் இசை அமைத்துள்ளேன். இதன் பின்பு முப்பத்து இரண்டு புதிய இராகங்களுக்கு இணை, கிளை, நட்புச்சுரத் தொடர்களை எழுதி அவைகளில் பாடல்களுக்குரிய இசை அமைத்திருக்கிறேன். புதிய இராகம் ஒவ்வொன்றிற்கும் இராக இலக்கணம், இராக சஞ்சாரம், சீவசுரம், இராகத்தின் முக்கிய சுரத் தொடர்கள் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளன.
து.ஆ.தனபாண்டியன்



این کتاب رو مطالعه کردید؟ نظر شما چیست؟