جزییات کتاب
நிராதாரவான லாக்கப் கைதிகளின் துயர் என்பது பரந்துபட்ட சமூகத்தின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது.விளிம்புநிலை மக்கள் குறித்த அக்கறையும் தலித் மக்களின் மீதான உடல்,உள வன்முறை குறித்த எழுத்துகளும் தமிழில் அதிகரித்துவரும் சூழலில் மு.சந்திரகுமாரின் லாக்கப் சாமான்யனின் குறிப்புக்கள் வருகிறது என்பது மிகப் பொருத்தமானதாகும். ‘லாக்கப்’ இந்த அறியப்படாத,சொல்லப்படாத,தெரியவராத அல்லது பதியப்படாத வெளியில் சஞ்சரிக்கிற அசாதாரணமான எழுத்து வகையைச் சேர்ந்த்தாக இருப்பதே இதனது முக்கியதுவம் என்று நாம் சொல்ல வேண்டும்.தொழிலாளி வர்க்கத்தவரின் அற்புதமான எழுத்தாற்றலுக்கு மு.சந்திரகுமார் ஒரு சமகால சான்று.
------
லாக்கப் - மு. சந்திரகுமார் (M.CHANDRAKUMAR) - சாமான்யனின் குறிப்புகள்