دانلود کتاب இசைத் தமிழ் இலக்கண விளக்கம்
by வா.சு.கோமதிசங்கர ஐயர்
|
عنوان فارسی: تصویر گرامر موسیقی |
دانلود کتاب
جزییات کتاب
இசையென்பது தமிழகத்தில் சிறப்பு வாய்ந்ததொரு கலையாகும். இக்கலை முழுக்க முழுக்க ஒலி உருவினாலாய கலவையேயாகும். இத்துணை சிறப்பான ஒரு கலையை முதன்முதலாகக் கண்டவர்கள் நம் தமிழரேயாவர்.
இசைக்கலையின் சிகரமாக விளங்குவது நிறமென்ற இராகமேயாகும். இவ்வாறான நிறத்தை ஆளத்தி செய்வது என்பது தமிழ்நாட்டில் மட்டுமே. இவ்வழக்கு வேறு எந்நாட்டிலுமில்லை. இத்துணை மாண்பு பெற்று அமைந்துள்ள இசைக் கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக உரைக்கப்படும் சிலப்பதிகாரம் என்ற நூலே இலக்கண நூலாக இப்பொழுது மதிக்கப் பெறுகின்றது. அது காப்பிய இலக்கியமாக மட்டுமன்றி இசைக்குரிய இலக்கண நூல்தானென்று மதித்து ஏற்றுக்கொள்தல் வேண்டும்.
"இசைத் தமிழ் இலக்கண விளக்கம்" என்ற இந்த நூல் தமிழ்நாட்டு மாணவ மாணவிகளின் இசை வளர்ச்சி கருதி எழுதப் பெற்றதாகும். இந்த நூலில் புதிது புதிதான இசைச் செய்திகளும், இதுவரை யாரும் சொல்லியிராத நுட்பமான பல இசை அமசங்களும் ஒவ்வொரு பகுதியிலும் வரையப் பெற்றுள்ளன. இந்நூலானது மாணவ மாணவிகளுக்கு மட்டுமன்றி, இசைக்கலை மாமணிகளுக்கும் அறிவிற்கு விருந்தூட்டுவதாகவும், இசையறிவு வளர்ச்சியை மேலோங்கச் செய்வனவாகவும் அமையும் என்று கருதுகின்றேன்.
- வா.சு.கோமதிசங்கர ஐயர், நூல் ஆசிரியர்