دانلود کتاب இசைத் தமிழ் வரலாறு
by து.ஆ.தனபாண்டியன்
|
عنوان فارسی: تاریخچه موسیقی |
دانلود کتاب
جزییات کتاب
சிலப்பதிகாரத்தில் பன்னிரு சுர நிலைகள், குரல்-இளி முறை, பன்னிரு இராசிகளில் ஏழு சுரங்கள் நிற்கும் தொன்றுபடு மரபு, வம்புறு மரபு என்னும் இரு முறைகளிலும் சுரங்களுக்கான அலகுகள் (சுருதிகள்) இணை, கிளை, நட்பு, பகைச்சுரங்கள், நாற்பெரும் பண்கள் (யாழ்கள்), அவைகளுக்கு இணையான தற்கால இராகங்கள், பண்ணுப்பெயர்த்தல், ஏழுபெரும் பாலைப்பண்கள், அவைகளுக்கு இணையான தற்கால இராகங்கள் முதலியவற்றை இந்த நூல் விளக்குகிறது.
இன்றைக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இசையாசிரியன், தண்ணுமையாசிரியன், குழலோன், யாழாசிரியன் ஆகியோரின் தகைமைகள் (தகுதிகள்) இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இந்த இசைக்கலைஞர்கள் இசை, தாளம் ஆகியவற்றின் இலக்கணங்களை அறிந்திருந்ததோடு கூத்து, சாக்த்தியத்தின் அமைப்பு, சாகித்தியத்தின் பொருள், பாடல்களில் வரும் சந்தங்கள் ஆகியவற்றையும் நன்கு தெரிந்திருக்கிறார்கள் என்னும் உண்மை இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் கூத்துக் கலையுடன் இசை பிண்ணிப் பிணைந்து நின்றது. இசை இல்லாமல் கூத்து இல்லை. ஆய்ச்சியர் குரவை, குன்றக் குறவைப் பாடல்களில் சிலவற்றிற்குப் பண் முறையில் இசை அமைத்து இந்நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
உள்ளத்தை ஈர்க்கும் பல பண்கள் சங்க காலத்துக்கு முன்பே நம் மக்கள் வழக்கில் இருந்தன. நூற்று மூன்று பண்கள், மூன்று வகைப்படும் ஆளத்தி, நூற்று எட்டு தாள்ங்கள், அவைகளின் மாத்திரை அளவுகள் ஆகியவை இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பண்டைய தமிழக இசயரங்குகளிலும் ஆடல் அரங்குகளிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற யாழ், குழல், தண்ணுமை மற்றும் தாளக் கருவிகள் பற்றிய முழு விவரங்களையும் இந்நூலில் காணலாம்.