دانلود کتاب சிலப்பதிகாரத்து இசைத் தமிழ்
by எஸ்.ராமநாதன்
|
عنوان فارسی: سولفات از گروه موسیقی انگلیسی |
دانلود کتاب
جزییات کتاب
இசையிலும் கூத்திலும் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்தவராய் இளங்கோவடிகள் இருந்தமையால், இவர் தம் ஒப்பற்ற நூலுள் இசையைப்பற்றியும் கூத்தைப்பற்றியும் பல செய்திகள் மிக நுட்ப மாக அமைத்து உலகுக்கு அருளியிருக்கின்றார், அப்பகுதிகளை ஆராய்ந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னேர் இசை முதலிய நுண்கலைகளில் சிறப்புற்றிருந்தமை தெளிவாகும், வாழ்க்கையோடு இரண்டறப்பின்னிக்கிடந்த இசையின் தன்மையையும், அவ்விசையின் அடிப்படையையும் விளக்கிக்காட்டும் ஒளி இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத் தில் வீசுகின்றது.
இளங்கோவடிகள் அருளிய நூல் ஒளி என்ருல், அதன் உரையாசிரியர்களான அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் ஆகியோரின் உரைகள் இரண்டும் அவ்வொளியைக் காட்டும் இருகண்கள் எனலாம். அவற்றின் உதவி யில்லா விட்டால் இசைக் கருவூலமாகிய இப்பகுதிகள், விளக்கம் பெருமலே போயிருக்கும்.
எத்துணே அரிய பொருளையும் நுண்மையாக உணர்த்த வல்லவர் இளங்கோவடிகள் என்பதை நாம் பலவிடங்களிற் காணலாகும். ஈண்டு ஒன்றை எடுத்துக் காட்டுவோம். செம் பாலை எனும் பாலை ஆய்ச்சியர்குரவையுள்ளும் அரங்கேற்று காதையுள்ளும் பேசப் படுகின்றது. ஆனுல் இரண்டும் ஒன்றற் கொன்று சிறிது வேறுபாடு உடையன. அரங்கேற்றுகாதை யில் வரும் செம்பாலையைக் குறிப்பிடுகையில் அடிகளார்,
'வம்புறு மரபிற் செம்பாலை ஆயது" என்று கூறியிருக்கிறார், '
வம்புறு’ என்று அடைகொடுத்து, பின்னர் ஆய்ச்சியர்குரவையில் வருவதைப் போலல்லாமல் இது புதிய மரபில் வந்தது என்று முற்கூட்டிக் குறிப்பாய் உணர்த்திய நுண்மையை என்னென்பது!
அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றின் பெருந்துணைகொண்டு, சிலப்பதிகாரத்திலுள்ள இசைப்பகுதி முழுதும் ஆராய்ந்து அதனுள் காணப்படும் துணுக்கங்களுக்கு விளக்கம் தந்து இந்நூல் ஆக்கப்பெற்றது.
எஸ்.ராமநாதன்