جزییات کتاب
"தாயுமான சுவாமியே தந்தை, தாயுமான சுவாமியே" எனும் தோடிராக கீர்த்தனையை அருள்மிகு மாரியப்ப சாமிகள் பாடக் கேட்டுள்ளேன். தோடியின், சாயலும் நிறமும் முதல் வரியிலேயே முழுதும் துள்ளித் ததும்பும். தோடி ராகம்பயில இந்த ஒரு கீர்த்தனையே போதும். இது மிக நீண்ட கீர்த்தனையே. இவ்வாறு நீளமாய் அமைந்த கீர்த்தனைகளைப் பாடிப் பார்க்கையில் கலிப்பாடலினின்றும், பரிபாடலினின்றும், கீர்த்தனைகள் தோன்றின எனும் எண்ணம் மலர்கின்றது; அதுவே கீர்த்தனை தோன்றிய வரலாறு, மத்தளச் சொற்கட்டில் அமைந்த மகுடங்கள் இப்பாடல்களில் பல அடுக்கடுக்காய் அமைந்து விளங்கும்; இம்மகுடங்களைப் பலசுரத் தானங்களிலும் பல தாளக்கணக்கு அடுக்குகளிலும் பொருள் பூத்துத்துளிர்க்க அருட்பெரும் மாரியப்ப சாமிகள் பாடுங்கால், கற்பனாசுரம் பாடும் முறையே தேவையில்லை என்ற எண்ணம் எழும்.
நாக்கறுத்த அப்பருக்கு வாக்களித்து வாழ்வழித்து
ஊக்குவித்தான் செந்திலோன் ஊற்று.
- தமிழிசை அறிஞர் வீ.கா.ப.சுந்தரம்