دانلود کتاب கீபோர்டில் கர்நாடக சங்கீத அடிப்படையில் மேற்க்கத்திய சங்கீதம்
by அரவிந்த் குமார்
|
عنوان فارسی: مزامیر غربی مبتنی بر مزامیر کارناتیک بر روی صفحه کلید |
دانلود کتاب
جزییات کتاب
இந்த கலையின் நுட்பங்களை தெரிந்துகொள்ள ஒரு குரு அவசியம் தேவை இக்காலத்தில் சிலர் தாங்கள் எங்கும் கற்கவில்லை தானாக வந்தது என்று சொல்லுகிறார்கள் இது சுத்தப்பொய்.
குறிப்பிட்ட ஒரு குருவிடம் அவர்கள் கற்காமல் இருக்கலாம் ஆனால் பல அனுபவசாலிகளை பார்த்து சிலவற்றை கிரகித்துக் கொள்வார்கள்.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசான் என்பார் பெரியோர் ஒவ்வொரு மனிதரிடமும் நாம் கற்றுக் கொள்ளும் விஷயம் ஏதாவது இருக்கும் இன்றைக்கு வானொலி தொலைக்காட்சி திரைப்படம் மற்றும் கச்சேரிகளில் இசையை கேட்கிறோம் இவற்றில் நாம் சிலவற்றை தெரிவித்துக்கொள்கிறோம் நமது அறிவிற்கு இவர்களெல்லாம் மறைமுக குருக்களாகஇருக்கிறார்கள்.
இவ்வழியில் இந்த நூல் இந்த நூல் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். இசை உலகம் முழுமைக்கும் பொதுமையானது. ஏழு ஸ்வரங்களை அவரவர் வெவ்வேறு பெயர்களில் அழைத்துக் கொண்டிருக்கிறோம் ஒரே இறைவன் உலகத்தை காக்க நாம் ஆயிரம் மதங்களில் அவரை தேடி நமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.
இசை பொதுமொழியாக இருக்க நாம் கர்நாடக சங்கீதம் வெஸ்டர்ன் ஹிந்துஸ்தானி அரபி என பல மொழி பேசிக்கொண்டிருக்கிறோம் .ஆதாரம் ஒன்று தான்.சேரும் வழிகள் பலவாக விட்டன. பாதையில் சில வேறுபாடுகள் இருக்கலாம் .முடிவு ஒன்றே.
நமக்குள் இருக்கும் எல்லா வேறுபாடுகளுக்கும் காரணம் நாம் நமக்கென்று ஒரு வட்டம் ஏற்படுத்தி நம் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறோம் மேலும் வட்டத்துக்கு வெளியில் உள்ள நல்லவற்றை அறியாமல் இருப்பதுதான்.
எல்லா சங்கீதங்களும் மனிதனை வயப்படுத்த தோன்றியவைதான் என்பதை உணர்ந்து அவற்றை பற்றி ஆர்வமாய் தெரிந்துகொள்ளும் போது, இசை ,உலகின் பொதுமொழி என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டின் கலாச்சாரப்படி பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டி சட்டையும் அணிந்தது ஒரு காலம்.
இன்று பல ஆண்கள் ஜீன்ஸ் பேண்டும் பெண்கள் சுடிதாரும் அணிகிறார்கள் இன்றைக்கு இது வசதியாக இருக்க அதை அணிவது தவறில்லை. நாகரிகம் என்பது ஆடையில் இல்லை குணத்தில் தான் இருக்கிறது.
கர்நாடக சங்கீதம் நுட்பமான சங்கீதம் கர்நாடக சங்கீதம் படித்தவர்கள் நவீன கீபோர்டு கருவியை வாசிக்கும் போதும் பாடும் போதும் மேற்கத்திய இசையின் அடிப்படையான கார்டுகள் மற்றும் ஸ்கேல்கள் தெரியாமல் திணறுகிறார்கள் இதனால் பல திறமையானவர்களால் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடிவதில்லை.
இத்தகையவர்களுக்கு மேற்கத்திய சங்கீதம் என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. ஒலிப்பதிவின் பொழுதும் மேடை கச்சேரிகளிலும் கார்டுகளைப் பற்றியும் ஸ்கேல்கள் பற்றி பேசும் பொழுதும் பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது.
இக்குறையை போக்க மேற்கத்திய இசை நுட்பங்களை நம் கர்நாடக சங்கீதத்துடன் ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ளேன்.
இன்றைக்கு இசையுலகில் கலப்பு என்ற சொல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பலவகை இசையை ஒன்றோடொன்று இணைப்பது தான் கலப்பு. இனிமையான ஸ்வரங்கள் இணைந்த தாளத்தோடு செல்வது தான் நல்ல சங்கீதம். இதில் எந்த கருவியை வேண்டுமானாலும் நாம் உபயோகப்படுத்தலாம்.
உதாரணமாக நம்முடைய கீரவாணியை மேற்கத்திய ஹார்மோனிக் மைனரில்(Harmonic minor) இணைத்து நம்முடைய திஸ்ர கதியில் மேற்கத்திய வால்டஸ்(walts) இணைப்பது ஒரு வகை கலப்பாக இருக்கும் . கீரவாணியும் , ஹார்மோனிக் மைனரும் ஒன்றே. திஸ்ரகதியும் வால்ட்ஸும் ஒன்றே.
இந்த கலப்பு படைப்பதற்கு இரு சங்கீத அடிப்படை அறிவது மிகமிக அவசியம். இந்தநூல் இதற்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். இன்றைக்கு இசையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவரும் கெய்போர்டில் இவற்றை வாசித்து தெரிந்துகொள்வது இன்றைய இசைபுரட்சிக்கு உதவியாக இருக்கும்.
வெவ்வேறு சங்கீதங்களை கற்கும் பொழுதும் உலகின் பொதுமொழி இசை என்பதை உணர்வீர்கள். உலகின் எல்லா சத்தங்களையும் ரசிக்கும் மனோபாவம் வரும். எல்லா மனிதர்களையும் நேசிக்கும் குணம் வரும்.
இந்தநூலில் இரு சங்கீத ஒப்புமை படத்துடன் , விரல் பயிற்சியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநூலை மேலோட்டமாக படிக்காமல் ஆழ படிப்பவர்கள் இசை நுட்பங்களை அறிந்து கொள்வார்கள். இசையார்வம் உள்ள நீங்கள் முயற்சியுடன் பயிற்சி செய்தால் நாளைய இசை உலகில் நீங்கள் அரசாட்சி செய்யப்போவது உறுதி.