دانلود کتاب தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு
by புலவர் செந்தலை ந.கவுதமன்
|
عنوان فارسی: تاریخ جنگ زبان تامیلنادو ایگیار |
دانلود کتاب
جزییات کتاب
- புலவர் செந்தலை ந.கவுதமன்
தாய்மொழி காக்கப்படவேண்டும் என உலக நாடுகள் ஒன்றியம் (ஐ.நா) வலியுறுத்துகிறது. பிப்பிரவரி 21 ஆம் நாள் 'உலகத் தாய்மொழி நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஆண்டுதோறும் அதைக் கொண்டாடி வருகின்றன.
முதல் மொழிப்போரில் (1938) கட்டாய இந்தி கைவிடப் பட்ட நாள் பிப்பிரவரி 21. அந்த வகையில் நாமும் உலக மொழிப்போரை ஆண்டுதோறும் நினைவுகூர அந்த நாள் உதவும்.
வங்க மொழியைக் காக்க 1957 ஆம் ஆண்டில் நான்கு பேர் உயிரிழந்த நாள் பிப்பிரவரி 21. வங்கமொழிக்காக நான்கு பேர் இறந்த நாளை 'உலகத் தாய்மொழி நாள்' என உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழ்மொழியைக் காப்பதற்காகப் பல நூறுபேர்களைப் பலி கொடுத்துள்ளோம் நாம்!
தமிழின வீர வரலாறு உலகத்திற்கு உணர்த்தப்பட வேண்டும் .