دانلود کتاب அடிமை ராஜ்யம்
by சுபா
|
عنوان فارسی: یک پادشاهی برده |
دانلود کتاب
جزییات کتاب
ராத்திரி நேரத்தின் ரீங்காரம் எட்டு திக்கிலிருந்தும் வந்துகொண்டிருந்தது. ஆந்தை ஒன்று எங்கிருந்தோ ழ்ழ்க், ழ்ழ்க் என்று குரல் கொடுத்தது. படபடவென்ற சத்தத்துடன் வௌவால்கள் பறந்துபோயின. பயம் காட்டும் சினிமாவின் ரீரெக்கார்டிங் போல, எத்தனைவித ஒலிகள் என்னை பயமுறுத்த?
என்னவாக இருந்தாலும் சரி, இந்தக் காட்டுப் பகுதியை உடனே தாண்டியாக வேண்டும்.. உடனே..
டார்ச்சை எடுத்துக்கொண்டு, அது காட்டிய வெளிச்சத்தைத் தொடர்ந்தேன். ஒற்றைப் பாதையில் வேகமாக ஓடினேன்.
சில மீட்டர்கள் ஓடியிருப்பேன். செடிகளில் சரசர என்று ஓர் அசைவு.
------------
அடிமை ராஜ்யம் - சுபா