دانلود کتاب பயம் எனப்படுவது யாதெனில் (Fear)
by ஓஷோ
|
عنوان فارسی: ترس چیست؟ |
دانلود کتاب
جزییات کتاب
நினைவில் கொள். நடுக்கம் மிகவும் உண்மையானது. பயம் ஒரு கனவைப் போன்றது. ஒரு திகில் கனவு, ஆனால் ஒரு திகில் கனவிற்கு பிறகு நீ எழுந்தால் அதன் பாதிப்புகள் இன்னமும் இருக்கின்றன. விளைவு தங்கியிருக்கிறது. உன்னுடைய மூச்சு மாறிவிட்டது.
நீ வியர்க்கிறாய், உனது உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கிறது, நீ சூடாக இருக்கிறாய். இப்பொழுது அது ஒரு வெறும் திகில் கனவு, ஒரு கனவு, சாரமற்றது என்பதை நீ அறிவாய். ஆனால் இந்த அறிதல் கூட உனது இருப்பின் அடிஆழத்திற்கு ஊடுருவிச்செல்வதற்கு நேரமெடுத்துக்கொள்கிறது. அது வரையில் சாரமற்ற கனவின் பாதிப்பு தொடரும். பயம் ஒரு திகில் கனவு.
பயம் எதனால் ஆனது? தன்னை அறியாத தன்மையினாலேயே பயம் உருவாகியிருக்கிறது. அங்கு ஒரேயொரு பயம் மட்டுமே இருக்கிறது. அது பல வழிகளில் வெளிப்படுகிறது. அது ஆயிரத்தொரு வழிகளில் வெளிப்படலாம். ஆனால் பயம் அடிப்படையில் ஒன்றுதான்.
-ஓஷோ
-----------------
பயம் எனப்படுவது யாதெனில் (Fear) - ஓஷோ
- தமிழில்: தியான் மைத்ரேயா