دانلود کتاب கானல்வரி (முதல் தொகுதி) - இந்திர விழாவில் இசைத்த யாழ், யாழின் மாண்பு
by வா.சு.கோமதிசங்கர ஐயர்
|
عنوان فارسی: Kanalwari (جلد اول) - جفن، آهنگ جفنا در جشنواره Indira بازی کرد |
دانلود کتاب
جزییات کتاب
சிலப்பதிகாரமென்பது பெருமையும் ஓங்கிய சிறப்பும் பெற்ற ஒப்புயவற்ற பெரும் காப்பியமாகும். அக்காப்பியத்துள் நுண்கலைகள் ஐந்தனுள் தலை சிறந்ததான இசைக் கலையின் நுட்பப் பகுதிகள் முழுவதும் அடங்கிக் கிடக்கின்றன.அவ்வுண்மைகள் ஆய்வின் பயனாகத்தான்வெளிவருவதற்காம். அவ்வாறான ஆய்வின் ஒரு பகுதியாகவே "யாழ் மாண்பு" என்ற இந்த இசை நூல் எழுதப்பட்டுள்ளது. இம்மாதிரியான ஒரு நூல் இதுகாறும் வெளிவரவில்லை என்று துணிந்து கூறலாம்.
கோவலனும் மாதவியும் இந்திர விழாவின்போது யாழ் இசைத்துப் பாடிய சிறப்பினால் யாழ் மாண்பு அறியப் படுகிறது. யாழ் மாண்பு என்ற இந்த நூலினுள் இசை சம்பந்தமாகச் சில செய்திகளை மேற்பரப்பாக அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.
நூலின் தன்மையை அறிந்துகொள்ள அது அளிக்கும் சில கருத்துக்களைப் பார்ப்போம்:
...............
ஏழிசைகளும் நிற்கின்ற நிலைக்களன் நான்கு வகைப் படும். அவை:
1. தொன்றுபடுமுறை
2. தொன்முறையியற்கை
3. வம்புறுமரபு
4. நுளையர்விளரி
என்பன.
தொன்றுதொடுமுறையில் நிற்கப்பெறுகின்ற ஏழிசையினைக் கொண்ட எல்லா நிரல்களும் "4-4-3-2-4-3-2" என்ற மாத்திரையினுடைய அளவாகிய அலகில், முறையே " ச-ரி-க-ம-ப-த-நி" என்ற ஏழு நரம்புகளும் நிற்கப்பெறும். இந்த அலகு முறைகளை சுத்தத் தான அலகுநிலை என்பர்.
தொன்முறையியற்கையில் நிற்கப்பெறுகின்ற ஏழிசையைக் கொண்ட எல்லா நிரல்களும் "4-3-2-4-4-3-2" என்ற மாத்திரையினையுடைய அளவு முறையாகிய அலகில், முறையே அதன் "ச-ரி-க-ம-ம-த-நி" என்ற ஏழு நரம்புகளும் நிற்கப் பெறும். இவ்வாறு நிற்கின்ற அலகுமுறைகளைச் செங்கோட்டு யாழுக்கு நிலையென்பர்.
வம்புறு மரபில் நிற்கப் பெறுகின்ற ஏழிசையினைக் கொண்ட எல்லா நிரல்களும் "4-3-2-4-3-2-4" என்ற மாத்திரயினையுடைய அளவு முறையாகிய அலகில் முறையே அதன் "ச-ரி-க-ம-ப-த நி" என்ற ஏழிசை நரம்புகளும் நிற்கப் பெறும். இவ்வாறு நிற்கின்ற அலகுகளை சகோடயாழலகு நிலையென்பர்.
நுளையர்விளரியில் நிற்கப் பெறுகின்ற ஏழிசையினைக் கொண்ட எல்லா நில்களும் "3-2-4--4-3-2-4" என்ற மாத்திரையினையுடைய அளவு முறையாகிய அலகில் முறையே அதன் ச-ரி-க-ம-ப-த-நி என்ற எழிசை நரம்புகளும் நிற்கப் பெறுவன. இவ்வாறு நிற்கப் பெறுகின்ற அலகு முறைகளை ஒவ்வா அலகினையுடைய பாடுதற்கியல்பில்லா நிலை என்பர். இதனைத் தீயபாலை என்றும் சுட்டுவர்.
.........................
இதுபோன்று, சிலப்பதிகாரத்திலுள்ள இசைச் செய்திகளை இந்த நூல் விரிவாக விளக்குகிறது.